320 likes | 635 Views
ÕÍÈ¢ÈÑ¢ Õ¼È. வணக்கம். வருக. பெற்றோர்களுக்குச் சில தகவல்கள். தமிழ்மொழிப் பாடத்திட்டம். அடிப்படைத் திறன்கள் கேட்டல் பேசுதல் படித்தல் எழுதுதல். புதிய பாடத்திட்டத்தின் கீழ். கேட்டலுக்கும் பேசுதலுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
E N D
ÕÍÈ¢ÈÑ¢ Õ¼È வணக்கம் வருக
பெற்றோர்களுக்குச்சில தகவல்கள்
தமிழ்மொழிப் பாடத்திட்டம் அடிப்படைத் திறன்கள் கேட்டல் பேசுதல் படித்தல் எழுதுதல்
புதிய பாடத்திட்டத்தின் கீழ் கேட்டலுக்கும் பேசுதலுக்கும்அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது
பேச்சுத் தமிழுக்குமுக்கியத்துவம்அளிக்கப்படுகிறது
பாடநூலில் உள்ளவை கேட்டல் கருத்தறிதல் பேசுதல் வாசிப்புப் பகுதி மொழிப் பயிற்சி
தேர்வு விவரங்கள் தாள் 1 – கட்டுரை தாள் 2 – மொழி தாள் 3 – கேட்டல் தாள் 4 - வாய்மொழி
கேட்டல் கருத்தறிதல்- 10% • எளிய கதை / நிகழ்ச்சி (2 - 3 பனுவல்கள்) • -செய்தி • - உரையாடல் • - விளம்பரம் • - கதை • - அறிக்கை • பனுவல்களைக் கவனமாகக் கேட்டுப் புரிந்துகொண்டு எளிய • வினாக்களுக்குவிடையளித்தல் • படத்தைத் தெரிவு செய்தல்
வாய்விட்டு வாசித்தல் • எளிய பகுதி (கதை / நிகழ்ச்சி) • பகுதியைப் பொருள் புரிந்து சரியான உச்சரிப்புடனும் பொருத்தமான தொனியுடனும் • வாய்விட்டுத் தெளிவாக வாசித்தல் • உரையாடல் – 10% • படத்தைப் பற்றி விவரித்துச் சொல்லுதல் • ஏதேனும் ஒரு தலைப்பில் பேசுதல். • படஉரையாடலுடன் தொடர்பு உடையதாக இருக்கும். • *பட உரையாடல் புத்தகம், மற்ற மொழி படஉரையாடல் புத்தகங்கள்
எடுத்துக்காட்டு 1.வேற்றுமை (8மதிப்பெண்கள்) • அன்று மாதவனின் பிறந்தநாள். அவன் தாயார் (Q1) ______ பிடித்த • பலகாரங்களைச் செய்தார். மாதவனுடைய (Q2) ______ எச்சில் ஊறியது. • அவன் ஒரு (Q3) _____ எடுத்து ருசி பார்த்தான். அவனுடைய தந்தை • (Q4) _____ அதிகம் சாப்பிட வேண்டாம் என்று எச்சரித்தார். அப்போது • வீட்டிற்கு விருந்தினர்கள் வரத் தொடங்கினர். Q1 (1) மாதவனை (2) மாதவனுக்கு (3) மாதவனால் (4) மாதவனின்( ) Q2(1) வாயில் (2) வாயால் (3) வாயிலிருந்து (4) வாயை ( )
எடுத்துக்காட்டு தெரிவுவிடைக் கருத்தறிதல் (10 மதிப்பெண்கள்) சிற்பி ஒருவன் தான் வடித்த சிற்பங்களைத் தனது கழுதையின் மீது ஏற்றிச் சென்று சந்தையில் விற்று வாழ்ந்து வந்தான். ஒருநாள், அவன் ஓர் அழகான கடவுள் சிலை ஒன்றை வடித்து, கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு சந்தைக்கு நடக்கத் தொடங்கினான். தெருவில் வருவோர் போவோர் எல்லாரும் சிலையின் அழகையும், கடவுளின் வனப்பையும் கண்டு வியந்தனர். அவர்கள் அதை வணங்கிச் சென்றனர். கழுதையோ எல்லாரும் தன்னைத் தான் வணங்கிச் செல்கிறார்கள் என்று நினைத்து கர்வம் கொண்டது. அதனால், அது கத்தத் தொடங்கியது. கழுதை தொடர்ந்து கத்தியதால் எல்லோரும் பயந்து ஒதுங்கினர். சிற்பிக்கு அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால், அவன் கீழே கிடந்த கம்பை எடுத்துக் கழுதையை நன்றாக அடித்தான். அடி வாங்கிய கழுதை அமைதியானது. அவர்கள் இருவரும் சந்தைக்குத் தொடர்ந்து நடந்தனர்.
எடுத்துக்காட்டு Q14சிற்பி எப்படிப் பிழைப்பு நடத்தி வந்தான்? (1) சிற்பங்களை வடித்து (2) கழுதையைச் சந்தையில் விற்று (3) வடித்த சிற்பங்களைச் சந்தையில் விற்று (4) கழுதையைச் சிற்பமாக வடித்து ( ) Q15 கழுதை சிற்பிக்கு எவ்வாறு பயன்பட்டது? (1) சிற்பி வடித்த சிற்பங்களை விற்பதற்கு (2)சிற்பி வடித்த சிற்பங்களை தூக்கிச் செல்வதற்கு (3)சிற்பி வடித்த சிற்பங்களைத் தெருவில் உள்ளவர்களிடம் காட்டுவதற்கு (4) சிற்பி வடித்த சிற்பங்களை மற்றவர்களிடம் கொடுப்பதற்கு ( ) Q16 அழகிய கடவுள் சிலையைக் கண்டவர்கள் என்ன செய்தனர்? (1)சிலையை வணங்கிச் சென்றனர் (2)கழுதையை வணங்கிச் சென்றனர் (3)சிற்பியை வணங்கிச் சென்றனர் (4)கழுதையையும் சிற்பியையும் வணங்கிச் சென்றனர் ()
எடுத்துக்காட்டு சுயவிடைக் கருத்தறிதல் (9மதிப்பெண்கள்) கவின் ஒருநாள் மீன் பிடிப்பதற்காகப் பாசிரிஸில் உள்ள மீன் பிடிக்கும் குளத்திற்குச் சென்றான். அங்கே அவன் ஒரு வலையையும் கூடையையும் வாங்கிக் கொண்டான். வலையைக் குளத்தில் போட்டு மீனைப் பிடித்தான். பிறகு, தான் பிடித்த மீன்களைக் கூடையில் போட்டான். அப்போது திடீரென்று ஒரு மீன், சத்தமாகக் கத்தியது. கவினுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. ‘இந்த மீனா கத்தியது?’ என்று கவின் யோசித்தான். அப்போது மீன், “தயவுசெய்து என்னை விட்டு விடு! நீ என்ன கேட்டாலும் நான் தருகிறேன்,” என்றது. கவின் ஆச்சரியத்துடன் அந்த மீனைப் பார்த்து, “எனக்கு ஒரு பறக்கும் வாகனம் வேண்டும்,” என்று கேட்டான். உடனே பறக்கும் வாகனம் வந்தது. கவின் அதில் ஏறி மகிழ்ச்சியாகத் தன் வீட்டுக்குப் போனான்.
எடுத்துக்காட்டு Q19 கவின் மீன் பிடிக்க எங்குச் சென்றான்?(1மதிப்பெண்) கவின் மீன் பிடிக்க_________________________________________ ___________________________________________________________. Q20 அங்கே அவன் எவற்றை வாங்கிக்கொண்டான்? (2மதிப்பெண்கள்) அங்கே அவன் _______________________________________________ வாங்கிக்கொண்டான் . Q21 கவின் ஏன் ஆச்சரியம் அடைந்தான்? (2மதிப்பெண்கள்) கூடையில் இருந்த ________________________________________ _____________________________________கவின் ஆச்சரியம் அடைந்தான்.
கட்டுரை – 15% • 3-ம் வகுப்பு • 1 படம், 8 உதவிச் சொற்கள், 8 வாக்கியங்கள் – SA1 • (50 சொற்களுக்குக் குறையாமல்-SA2) • 4-ம் வகுப்பு(70-80 சொற்களுக்குக் குறையாமல்) - 4 படத்தொடர், 8 உதவிச் சொற்கள்வயதிற்கேற்ற சொல்வளத்தையும்வாக்கிய அமைப்பையும் பயன்படுத்திக்கதை அல்லதுநிகழ்வுக் கட்டுரைஎழுதுதல்
மாணவர்களுக்கு வீட்டில் தமிழில் பேசும் சூழலை உருவாக்கித் தர வேண்டும் மாணவர்களைக் கதைப் புத்தகம் படிக்க ஊக்குவிக்க வேண்டும் நல்ல தரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க ஊக்குவிக்க வேண்டும் பெற்றோர்ஆதரவு
வெளியில் செல்லும் போது சுற்றுப்புறத்தில் உள்ளவற்றைப் பற்றி தமிழில் கலந்துரையாடவும் பேச்சுத் தமிழில் பேசுவது சிறப்பு பிள்ளைகள் பேசும் போது அடிக்கடி அவர்களின் தவற்றைச் சுட்டிக் காட்டித் திருத்த வேண்டாம் ***நான் என்ன செய்வேன்? பெற்றோர் ஆதரவு
ஒவ்வொரு நாளும் தமிழ்க் கோப்பைப் பார்வையிடுதல் கையொப்பமிடுதல் ஆசிரியரோடு தொடர்பு பெற்றோர் ஆதரவு
இவ்வாண்டு நடைபெறும் நிகழ்வுகள்தொடக்க நிலை 3 & 41. ENRICHMENT COURSE – ACTOR’S GUILD2. முரசு அஞ்சல்3. E-LEARNING –பழகு தமிழ் (P3 & P4)4. SINDA – PROJECT VICTORY (P4)
மாணவர்களுக்குச் சில மின்னஞ்சல் முகவரிகள் http://sangamam.edumall.sg/tamilosai/slot/ u113/index.html வாங்கி படிக்க தமிழ் முரசு வளர்நிலா
நாங்கள் சொல்லும் ரகசியம் பயிற்சி முயற்சி வெற்றி
ஆசிரியர்களின் மின்னஞ்சல் முகவரி (EMAIL ADDRESS) MRS J LOGAN (ஒருங்கிணைப்பாளர்)jamunarani_samiappan@moe.edu.sgMDM KAMALADEVI Ckamaladevi_chellayya@moe.edu.sg