670 likes | 857 Views
Presentation about Traditional paddy varieties details of TamilNadu useful tpofarmers and students
E N D
கழுகு பார்வையில் பாரம்பரிய நெல் ரகங்கள் (Bird’s eye view of Traditional Paddy Varieties in Delta Districts) தொகுப்பு : ச. கண்ணன். மற்றும் து. சிவவீரபாண்டியன் ச கண்ணன். மூத்த வேளாண்மை அலுவலர் விதை பரிசோதனை நிலையம் திருவாரூர் து. சிவவீரபாண்டியன் விதை பரிசோதனை அலுவலர் விதை பரிசோதனை நிலையம் தஞ்சாவூர்
பாரம்பரியரகங்களுக்குஏற்றபட்டங்கள்எவை..?பாரம்பரியரகங்களுக்குஏற்றபட்டங்கள்எவை..? • அறுபதாம்குறுவை, பூங்கார், கருங்குறுவை, குழியடிச்சான், கார், சிங்கினிகார், அன்னமழகி, உவர்முன்டா, குள்ளங்கார்போன்றகுறுகியகால (60 முதல் 120 நாட்கள்) ரகங்கள், குறுவைப்பட்டத்துக்குஏற்றவை. • தூயமல்லி, இலுப்பைப்பூசம்பா, சீரகச்சம்பா, வாசனைசீரகச்சம்பா, தேங்காய்ப்பூசம்பா, கவுனி, சிகப்புக்கவுனி, சேலம்சன்னா, சம்பாமோசனம், குடவாழைபோன்றமத்தியகால (130 முதல் 140 நாட்கள்) ரகங்கள், சம்பாபட்டத்துக்குஏற்றவை. • மாப்பிள்ளைச்சம்பா, காட்டுயானம், ஒட்டடையான், கருடன்சம்பா, தங்கச்சம்பா, நீலஞ்சம்பா, வாடன்சம்பாபோன்றநீண்டகால (140 முதல் 200 நாட்கள்) ரகங்கள், ஆகஸ்ட்முதல்செப்டம்பர்வரையானகாலத்துக்குஏற்றவை
காலாநமக் (நெல்) • இந்தியாவின்சிறந்தமற்றும்நறுமணம்மிகுந்தநெல்வகையானஇது, புத்தக்காலமானகி. மு 6 ஆம்நூற்றாண்டு (600 BC) முதலேசாகுபடிசெய்யப்பட்டுவந்துள்ளதாககருதப்படுகிறது. • இந்தியவடமொழியில்பெயரைக்கொண்டுள்ளஇந்தகாலாநமக்நெல், ‘காலா’ → “கருப்பு”, ‘நமக்’ → “உப்பு” (Black salt) கருப்புநிறமேலுறையோடு (உமி) காணப்படுவதாலும், அல்லது, அமிலநிலை 9.0 - 9.5 என்றஅளவிலுள்ளஉவர் (உப்பு (களர்) நிலங்களில்செழித்துவளர்வதாலும்இப்பெயர்பெற்றிருக்கும்என்றும்கூறப்படுகிறது. • மருத்துவகுணம் • மனிதனின்முக்குணங்களில்முதன்மையானகுணமானசாத்விககுணத்தைதரவல்லகாலாநமக், சிறுநீரகம், இரத்தப்புற்றுநோய், மூளை, மற்றும்தோல்சம்பந்தப்பட்டநோய்களையும்எதிர்க்கும்திறனுடையதாககருதப்படுகிறது. மேலும், இவ்வரிசிச்சோறுதொடர்ந்துஉண்பதன்மூலம், நீரிழிவுமற்றும்குருதிஅழுத்தம் (BP) போன்றநோய்களையும்கட்டுப்படுத்தவதாககூறப்படுகிறது
கூம்வாளை • கூம்வாளை (Koomvalai) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள, “சுக்கன் கொள்ளை” எனும் நாட்டுப்புறப் பகுதியில் பிரதானமாக விளையக்கூடிய இந்நெல் வகை, ஒரு ஏக்கருக்கு சுமார் 1300 கிலோ நெல் தானியமும், சுமார் 1800 கிலோ வைக்கோலும், மகசூலாக கிடைப்பதாகக் கூறப்படுகிறது. • மத்திய, மற்றும் நீண்டக்கால நெல் வகையைச்சார்ந்த நெற்பயிர்கள் சாகுபடி செய்ய ஏற்ற பருவகாலமான சம்பா பட்டம் எனும் இப்பருவத்தில், 128 - 130 நாள் வயதுடைய கூம்வாளை நெற்பயிர் பயிரிடப்படுகிறது. மேலும் ஆகத்து, மற்றும் செப்டம்பர் மாதங்களில் தொடங்கக்கூடிய சம்பா பட்டத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய ஏற்றப் பருவமாக விளங்குகிறது. • நேரடி நெல் விதைப்பு, மற்றும் நாற்று நடுதல் என இரண்டு முறைகளையும் பின்பற்றி விளைவிக்கப்படும் இந்த நெற்பயிர்கள், 4½ - 5 அடிகள் உயரம் வரை வளரக்கூடியது. • மணல் கலந்த மணற்பாங்கு, மற்றும் நீர் சூழ்ந்த நிலப் பகுதிகள் ஆகியவற்றிற்கு மிகவும் ஏற்றரகமாகும் • கூம்வாளையின் அரிசி பழுப்பு நிறத்தில் பெரு நயத்துடன் (தடித்து) காணப்படுகிறது.கூம்வாளையின் நீண்ட வைக்கோலை பொதுவாக கூரை வேய்தலுக்குப் பயன்படுத்தப்படுகிறது
ஒட்டடையான் • ஒட்டடையான் பாரம்பரிய நெல் இரகங்களில் ஒன்றான இது, காவிரியின் கழிமுக (டெல்டா) மாவட்டங்களில் மட்டுமல்லாது, தமிழகத்தில் மடுப் (சுனை) பகுதிகளில் இந்த நெல் சாகுபடி செய்யப்பட்டுவந்துள்ளது. • .ஆடிப்பட்டத்தில் ( ஆடி மாதம்) விதைக்கப்படும் இவ்வகை நெல், மழை, வெள்ளம் வந்தாலும் தாங்கிக்கொண்டு ஆறடிவரை வளரக்கூடியது. • பாரம்பரிய நெல் ரகங்களில், மிக அதிக நாட்களாக இருநூறு நாள் வயதுடைய இது. ஒட்டடை போன்று அழுக்கு நிறம் கொண்ட மஞ்சள் நிற நெல்லாகவும், கருஞ்சிவப்பு அரிசியாகவும் காணப்படுகிறது. • ஏக்கருக்குக் குறைந்தபட்சம் பதினெட்டு மூட்டை (75 கிலோ) மகசூல் கிடைக்ககூடிய இந்நெல் இரகம், மற்றப் பாரம்பரிய இரகங்களைவிட ஐந்து மடங்கு கூடுதலாக வைக்கோல் தரக்கூடியது. • நெல் மணி முற்றிய பிறகு சாயும் தன்மை கொண்ட இது, அறு வடையில் பாதிப்பு ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
குறுவைக் களஞ்சியம் குறுவைக் களஞ்சியம் (KuruvaiKalanchiyam) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டத்தித்தில், பிரதானாமாக விளைவதாக கருதப்படும் இந்நெல் வகை, பொய்க்காத பருவமழைக் காலத்தில் ஒரு ஏக்கருக்கு சுமார் 1500 - 2000 கிலோ தானிய மகசூலும், 1 டன் அளவுக்கு வைக்கோலும் கிடைப்பதாக கூறப்படுகிறது, குறுகியக்கால பயிரான 110 நாட்கள் வயதுடைய இந்நெல் இரகத்தை, செப்டம்பர் மாதம் தொடங்கும் பின் சம்பா பருவத்தில் ( தமிழ் மதம் ஆவணியில்) விதைத்து, சனவரியில் (தமிழ் மதம் தையில்) அறுவடைச் செய்யபடுகிறது.[1]மேலும் இதேப் பருவத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுவதாக அறியப்படுகிறது குறுவைக் களஞ்சிய நெல் சொரசொரப்புடைய கடினமான நெல் வகையாகும்.
அறுபதம் குருவை குறிகிய காலத்தில் விளையக்கூடியது .எலும்பு பலப்படும் தசைகளை வழுவுட்டும்
அறுபதாம் குறுவை அரிசி எலும்பு சரியாகும்
வாடன் சம்பா குறிகிய காலத்தில் விளையக்கூடியது.எலும்பு பலப்படும் தசைகளை வழுவுட்டும்
வாடன் சம்பா அரிசி அமைதியான தூக்கம் வரும்
காடைக் கழுத்தான் • காடைக் கழுத்தான் (Kadaikazhuthan) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். • தமிழகத்தின், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள, “சுக்கன் கொள்ளை” எனும் நாட்டுப்புறப் பகுதியில் பிரதானாமாக விளையக்கூடிய இந்நெல் வகை, ஒரு ஏக்கருக்கு சுமார் 1350 கிலோ நெல் தானியமும், சுமார் 1200 கிலோ வைக்கோலும், மகசூலாக கிடைப்பதாக கூறப்படுகிறது. • காடைக் கழுத்தான் நெல்மணிகள் முனையின் கூம்புப் பகுதியில் வெண்ணிற வளையம் காணப்படுவதால், இந்த நெல்லிற்கு காடைக் கழுத்தான் என்றழைக்கப்பதாக கூறப்படுகிறது. • மத்திய, மற்றும் நீண்டக்கால நெல் வகையைச்சார்ந்த நெற்பயிர்கள் சாகுபடி செய்ய ஏற்ற பருவகாலமான சம்பா பட்டம் எனும் இப்பருவத்தில், 165 - 170 நாள் வயதுடைய காடைக் கழுத்தான் பயிரிடப்படுகிறது
கருங்குறுவை • கருங்குறுவை ரகம் எல்லா வகையான மண்ணிலும் விளையும். குறுவை, சம்பா இரண்டு பட்டங்களுக்கும் ஏற்றது. இதன் பூர்வீகம் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் எனச் சொல்லப்படுகிறது. சோறு மற்றும் கஞ்சிக்கு சிறப்பாக இருக்கும். அரிசி, வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த அரிசியில், இரும்புச்சத்து நிறைந்துள்ளது, • ரத்தசோகை, குஷ்டம் ஆகிய நோய்களைக் குணப்படுத்தக்கூடியது என்று சித்த மருத்துவம் சொல்கிறது. இதுதவிரப் போக சக்தியை அதிகரிக்கும். கஞ்சி, இட்லி, தோசைக்கு ஏற்ற ரகம். கருங்குறுவை சாதத்துடன் மூலிகை சேர்த்து லேகியம் செய்து சாப்பிட்டுவந்தால், யானைக்கால் நோய் மட்டுப்படும். • கருங்குறுவை அரிசியில் குஷ்டத்தையும் விஷக்கடியையும் போக்கும் சக்தி உள்ளது. மேலும், உடலை வலுவாக்கும் காயகல்பச் சக்தியும் உள்ளது. இந்த அரிசி ஒரு பங்கும், தண்ணீர் மூன்று பங்கும் சேர்த்து மண்பானையில் ஆறு மாதம் வைத்திருந்தால் அது பால்போல் மாறிவிடும். அதற்கு `அன்னக்காடி’ என்று பெயர். காடி என்றால் மருந்து என்று அர்த்தம். இதை உண்டுவந்தால் மிகக் கொடிய வியாதியான காலரா மட்டுப்படும். கருங்குறுவை அரிசியை மூலிகைகளுடன் சேர்க்கும்போது, வீரியம் அதிகரிப்பதுடன் கிரியா ஊக்கியாகவும். • கருங்குறுவை ரகத்தின் வயது 110 நாட்கள். இது, மோட்டா ரகம். நான்கு அடிவரை வளரும். நீர் நின்றாலும் தாங்கி வளர்ந்து மகசூல் கொடுக்கக் கூடியது. குறுவை நெல் மணிகள் ஒரு வருடம் பூமியில் கிடந்தாலும் மக்கிப்போகாது. ஒரு வருடம் கழித்துக்கூட முளைக்கும் தன்மை உடையது .
கருங்குறுவை இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்
வாலான் சம்பா • பாரம்பரிய நெல் ரகங்களில் நீண்ட வயதுடைய நெல் ரகங்களில் வாலான் நெல்லும் ஒன்று. இதன் வயது நூற்றி அறுபது நாட்கள். • இது எல்லா மண் ரகங்களுக்கும் ஏற்ற ரகம். மோட்டா ரகம். வெள்ளை அரிசி. வெள்ளம், வறட்சியைத் தாங்கி வளரும். இதற்கு எந்த உரமும் தேவையில்லை. • ஒரு சால் உழவு செய்து, விதை தெளித்துவிட்டுவந்தால் போதும். • மழை பெய்த ஈரத்திலேயே முளைத்துப் பயிர் செழித்து மகசூல் கொடுக்கும். • தமிழ்நாட்டில் பரவலாகச் சாகுபடி செய்யப்பட்டுவரும் இந்த நெல் ரகம், உழவர்களுக்கு அதிகச் செலவில்லாமல் மகசூல் கொடுக்கக்கூடிய ரகங்களில் முதன்மையானது. • ஏக்கருக்கு முப்பது முட்டைக்கு மேல் மகசூல் தரும், அரிய வகை நெல் ரகம் வாலான் நெல்லின் அரிசி, இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டது. எல்லா வகையான சமையலுக்கும் ஏற்றது. • புட்டு செய்து பருவமடைந்த பெண்களுக்குக் கொடுத்தால் அதிகச் சக்தியைக் கொடுக்கும். சுமங்கலி பூஜைக்கும், ஆடிப் பெருக்கில் சாமி கும்பிடவும் இந்த அரிசி பயன்படுத்தப்படுகிறது. • இந்த அரிசியைத் தொடர்ந்து சாப்பிடுவதன்மூலம் குடல் சுத்தப்படும், தேகம் அழகு பெறும். பித்தம், வயிறு சம்பந்தமான நோய்கள், கரப்பான், மந்த வாயு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். • இந்த ரகத்தின் அரிசியை வேகவைத்து அதில் சிறிது கறிவேப்பிலையைப் போட்டு ஊறவைத்து, அதன் நீராகாரத்தைப் பருகினால் நெய் போல் மணம் கமழும். இந்த ரகத்தில் நோய் எதிர்ப்புசக்தி அதிகம் .
வாலான் சம்பா சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்
தங்கச் சம்பா • தங்கச் சம்பா பாரம்பரிய நெல் வகை, சம்பா பட்டத்துக்கு ஏற்றது. • ஐந்தடி வரை வளரும் தங்கச் சம்பா மோட்டா ரகம். மத்திய காலப் பயிர். நூற்றி முப்பது நாளில் அறுவடைக்கு வரக்கூடியது. • ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்ய ஏற்ற ரகம். சிவப்பு நெல், சிவப்பு அரிசி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மருத்துவ குணம் கொண்ட நெல் ரகம் இது. • பாரம்பரிய நெல் ரகங்களில் தங்கச் சம்பா நெல் அரிசியை உணவு, பலகாரங்களுக்கு பயன்படுத்தி வந்தால், உடல் ஆரோக்கியத்துடனும் முகம் பொலிவுடனும் இருப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும். • தமிழகத்தில் பரவலாக இந்த நெல் சாகுபடி செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் ஏக்கருக்கு இருபது மூட்டை மகசூல் கிடைக்கும். அதிகபட்சம் ஏக்கருக்கு முப்பது மூட்டைவரை மகசூல் கிடைக்கும். • இது இயற்கைச் சீற்றங்களையும் தாங்கி வளரக்கூடியது. • அறுவடை செய்து நெல்லைத் தூற்றும்போது, தங்கம் போல் நெல் ஜொலிப்பதைக் காணலாம். அதனால்தானோ என்னவோ, இந்த நெல் ரகத்துக்கு `தங்கச் சம்பா’ என பெயர் வந்திருக்குமோ?
தங்கச்சம்பா அரிசி பல், இதயம் வலுவாகும்
குடைவாழை • தமிழகத்துக்கே பெருமை சேர்க்கும் நெல் ரகம் குடைவாழை. விதைத்த பிறகு ஒரு முறை மழை பெய்துவிட்டால் போதும், மூன்று நாட்களில் விதை முளைத்து நிலத்தின் மேல் பச்சைப் போர்வை போற்றியது போல் காட்சியளிக்கும். மிக வேகமாகவும், இயற்கைச் சீற்றங்களைத் தாங்கியும் வளரும் தன்மை கொண்டது இந்த ரகம். • இந்த ரகத்துக்குக் கோடையில் ஆடு, மாடு கிடை அமைத்து நிலத்தை வளப்படுத்துவது அவசியம். • நூற்றி முப்பது நாள் வயதுடைய இந்த நெல் ரகம், மோட்டா ரகம். • சிவப்பு நெல், சிவப்பு அரிசி. அறுவடையின்போது கதிர்கள் நான்கு திசைகளிலும் குடை விரித்ததுபோல் காட்சியளிப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதனால்தான் இதற்குக் `குடைவாழை’ என்று பெயர். • உணவு, அனைத்துப் பலகாரங்களைச் செய்வதற்கும் ஏற்ற நெல் ரகம் இது. விவசாயிகளும் தொழிலாளர்களும் இரவு, காலை என இரண்டு வேளைக்கும் சேர்த்துச் சமைத்து இரவில் சாப்பிட்டுவிட்டு, மீதி சாதத்தில் தண்ணீர் ஊற்றி மறுநாள் பழைய சாதம் அல்லது நீராகாரமாக வயலுக்கு எடுத்துச் செல்வார்கள். காலை, மதியத்துக்கு இடையே ஒரே வேளை பகல் உணவாகப் பழைய சாதத்தைச் சாப்பிட்டுவிட்டு, கொஞ்சமும் சோர்வு அடையாமல் வேலை செய்யும் தெம்பை இந்த ரகம் கொடுக்கும். • நீரிழிவு நோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் திறன் குடைவாழைக்கு உண்டு. குடலைச் சுத்தப்படுத்துவதிலும், மலச்சிக்கல் இல்லாமல் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும் குடவாழை முக்கியப் பங்கு வகிக்கிறது
குடைவாழை குடை வாழை அரிசிகுடல் சுத்தமாகும்
ஆற்காடு கிச்சலி சம்பா ஆற்காடு கிச்சலி சம்பா வெள்ளை அரிசியும் சன்னரகமான நெல் சத்து மிகுந்தது தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியும் ஆரோக்கியமானதகவும் இருக்கும் கால்நடைகளுக்கு இந்த வைக்கோலை விரும்பி உண்ணும் அதிகமாக பால் சுரக்கும்.அனைத்து வகையான பலகரங்களுகும் ஏற்றது
கிச்சிலி சம்பா அரிசி இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிக
களர் பாலை • களர் பாலை (Kalarpalai) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள, “சுக்கன் கொள்ளை” எனும் நாட்டுப்புறப் பகுதியில் பிரதானாமாக விளையக்கூடிய இந்நெல் வகை, ஒரு ஏக்கருக்கு சுமார் 1200 - 1300 கிலோ நெல் தானியமும், சுமார் 1300 கிலோ வைக்கோலும், மகசூலாக கிடைப்பதாக கூறப்படுகிறது. • 120 நாட்கள் வயதுடைய குறுகியகால நெற்பயிரான களர் பாலை, “நவரை பட்டம்” எனும் பருவத்தில் பயிரிடப்படுகிறது.[ • காரத்தன்மை உடைய களர் நிலங்களை ஏற்று வளரக்கூடிய இந்நெல் இரகம், வறட்சியையும் தாங்கக்கூடியது. • நாற்று நடவு முறைக்கு ஏற்ற இராகமான இது, பூச்சிகள் மற்றும் நோய்களை எதிர்க்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.[ சொரசொரப்பான கடினத்தன்மை வாய்ந்த களர் பாலையின் அரிசி பழுப்பு நிறத்தில் பெரு நயத்துடன் காணப்படுகிறது. உவர்ப்பு நிறைந்த, உப்புத்தன்மை வாய்ந்த களர் நிலங்களில் செழித்து வளர்வதால், இந்த நெல்களர் பாலை எனப்படுகிறது
கல்லுருண்டை கல்லுருண்டை பாரம்பரிய நெல் வகையைச்சார்ந்த இது, தமிழகத்தின்நாகப்பட்டினம் மாவட்டப் பகுதிகளில் விளையக்கூடிய நெல் இரகமாகும். 126 சென்டிமீட்டர் உயரம் வரையில் வளரக்கூடிய இதன் நெற்பயிர், 120 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது.[1] களிகலப்பு மண் வகைக்கு ஏற்ற, மற்றும் நன்கு வளரக்கூடிய இந்த கல்லுருண்டையின் நெற்பயிர், வறட்சி, பூச்சி மற்றும் உப்புத் தன்மையை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட நெல் இரகமாகும். கல்லுருண்டை நெல்லின் தானியமணி, கருப்பு நிற மங்கிய கோடுகளுடன் காணப்படும், மஞ்சள் நிறமுடைய நெல்லாகும். மேலும் இதன் நெல் மணி சற்று தடித்தும் (மோட்டா) வெளிறிய மஞ்சள் நிறமுடன் உள்ளது.[2] குறுகியகாலப் பயிரான கல்லுருண்டை, தாளடி, பிசாணம் எனப்படும் பின்சம்பா (பட்டம்) பருவகாலமான செப்டம்பர் 15 முதல், - பிப்ரவரி 14 முடிய உள்ள இடைப்பட்ட காலத்திலும், மற்றும் நவரை பட்டம் எனப்படும் டிசம்பர் 15 முதல், - மார்ச் 14 முடிய, இந்த இரகத்திற்கு ஏற்ற பருவங்களாகும்.[2
சிகப்பு குருவிக்கார் சிகப்பு குருவிக்கார் (SigappuKuruvikar) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகையாகும். மத்தியகால நெற்பயிரான இது, 120 - 125 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. மணற்பாங்கானமற்றும் களிமண் போன்ற நிலப்பகுதிகளில் நன்கு வளரக்கூடிய இந்த நெல் இரகம், சம்பா, முன் சம்பா, பின் சம்பா, தாளடி, பிசாணம் மற்றும் பின் பிசாணம் போன்ற அனைத்து நெற்பருவத்திலும் பயிரிட ஏற்ற இரகமாகும். தமிழ்நாட்டின்வேதாரண்யம் வட்டத்துக்கு உட்பட்ட "பெரிய குத்தகை" எனும் பகுதியில் பிரதானமாக விளையக்கூடிய இந்த நெற்பயிர், வறட்சியைத் தாங்கி வளரக்கூடியதாகும்
கருடன் சம்பா • பாரம்பரிய நெல் வகைகளில் எல்லாத் தரப்பினரும் உணவுக்காகத் தேர்ந்தெடுக்கும் முதன்மையான நெல் வகை கருடன் சம்பா. • கருடன் கழுத்தில் வெள்ளையாக இருப்பதுபோல், கருடன் சம்பா நெல்லின் நுனிப் பகுதியில் வட்டமான வெள்ளை நிறம் இருக்கும். • வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களைத் தாங்கி வளரக்கூடியது. • சாப்பாட்டுக்கும், பலகாரங்களுக்கும் ஏற்ற ரகமாகக் கருதப்படுகிறது. • ஒரு காலத்தில் மணப்பாறை முறுக்கு இந்த அரிசியைக் கொண்டு செய்யப்பட்டுப் பிரபலமடைந்ததாகத் தகவல் உள்ளதுசீக்கிரமே வேகக்கூடிய ரகமாக இருப்பதால் பாரம்பரிய அரிசி வகைகளில் இல்லத்தரசிகளிடம் முதன்மை பெற்றது கருடன் சம்பா. • சிகப்பு நெல், வெள்ளை அரிசி கொண்ட இந்த வகை நடுத்தரமான ரகம், மத்தியக் காலப் பயிர், • 140 நாட்களுக்குள் அறுவடைக்கு வரக்கூடியது. • நடவு, நேரடி விதைப்பு, ஒற்றை நாற்று நடவு முறைக்கு ஏற்றது. நான்கு அடி உயரம்வரை வளரும். • பாரம்பரிய நெல்லில் வரலாற்று சிறப்புமிக்க இந்த ரகம், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் முடிகொண்டான் கிராமத்தில் குழந்தைவேலுடையார் என்ற பண்ணையார் உருவாக்கியது. • மகசூல் அதிகபட்சம் 3,500 கிலோ
கருடன் சம்பா அரிசி இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்
காட்டு யானம் நெல் ரகம் • காட்டுயானம் (KattuYanam) கட்டுடைஓணான்என்றுஅழைக்கப்பட்டுகாலப்போக்கில்வழக்கொழிந்துபோய்தற்போதுகாட்டுயானம்என்றுஅழைக்கப்பட்டு • ,நெடுங்காலமாகபயன்பாட்டில்உள்ளபாரம்பரியநெல்வகையானஇது, மற்றப்பாரம்பரியநெல்இரகங்களைவிடகூடுதல்மருத்துவக்குணம்கொண்டது. எந்தத்தட்பவெப்பநிலையிலும்விளையக்கூடியஇந்நெல்இரகம், வறட்சியிலும், வெள்ளத்திலும்மகசூல்கொடுக்கக்கூடியதாகும். • ஏழுஅடிஉயரம்வரைவளரும்காட்டுயானம், யானையையும்மறைக்கக்கூடியஅளவிற்குவளர்கிறது. (அதனாலேயேஇந்தநெற்பயிர்க்கு “காட்டுயானம்” எனப்பெயர்பெற்றுள்ளது)[. • ஒவ்வொரு கதிரிலும், நெல் மணிகள், கொத்து, கொத்தாக விளையும் ரகம்.165 நாளில், பயிர் அறுவடைக்குத் தயாராகி விடும் • . இதன்அரிசியைமண்பானையில்சமைத்து, தேவையானஅளவுதண்ணீரைஊற்றிவைத்துமறுநாள்காலையில்சாதம், நீராகாரத்தைத்தொடர்ந்துஒருமண்டலத்துக்கு (48 நாட்கள்[3]) சாப்பிட்டுவந்தால், எவ்வகைநோய்க்கும், மற்றும்நீரிழிவுநோய்க்கும்நல்லபலன்அளிக்கக்கூடியது. • இந்தக்காட்டுயானம்பச்சரிசிக்கஞ்சியுடன் (Rice Porridge), கறிவேம்புஇலையைகொத்தாகப்போட்டுமூடிவைத்துமறுநாள்காலைஉணவுக்குமுன்தொடர்ந்துசாப்பிட்டுவந்தால்புற்றுநோயால்பாதிக்கப்பட்டப்புண்ஆருவதாககூறப்படுகிறது. மேலும்காட்டுயானத்தின்மூலம்புற்றுநோயைக்குணப்படுத்தும்தன்மைஉள்ளது
காட்டுயானம் அரிசி நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்
மைசூர் மல்லி • மைசூர் மல்லி ரகம் மன்னர்களுக்கு உணவளிப்பதற்காகவே உற்பத்தி செய்யப்பட்ட ஒன்று. • சாதம் தும்பைப் பூ போல் வெண்மையாகவும் இருக்கும். • இந்த ரகம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக சேலம், தருமபுரி மாவட்டங்களில் விவசாயிகள் தொடர்ச்சியாக உற்பத்தி செய்துவருகின்றனர். • இல்லத்தரசிகள் விரும்புகிற வகையில் பழுப்பு நிற அரிசி, நடுத்தர ரகம், விரைவாக வேகக்கூடியது. உணவு, அனைத்து பலகார வகைகளுக்கும் ஏற்ற ரகமும்கூட. இந்த ரகம் மிகுந்த மருத்துவ குணம் கொண்டதாகவும், சத்து மிகுந்ததாகவும் கருதப்படுகிறது. • சாதம் வடித்த கஞ்சி நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக இருப்பதால், இந்த கஞ்சியை யாரும் வீணாக்குவதில்லை. இதனுடைய பழைய சாதமான நீராகாரம் சுவையும் சத்தும் மிகுந்ததாக இருக்கிறது. • குழந்தைகளுக்கு உணவளிக்க ஏற்ற ரகம். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் ஆவது இந்த ரகத்தின் சிறப்பு. நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பதால், குழந்தைகள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். .
பூங்கார் • பாரம்பரிய நெல் ரகங்களில் குறுகிய காலப் பயிர். எல்லாப் பருவங்களுக்கும் ஏற்ற பயிர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மண் வகைகளுக்கும் ஏற்ற ரகம். ஆண்டுக்கு மூன்று முறை சாகுபடி செய்ய ஏற்ற ரகம் பூங்கார். • இதன் வயது எழுபது நாட்கள் என்றாலும், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிர் செய்யும்போது எழுபதிலிருந்து தொண்ணூறு நாட்களில் அறுவடைக்குத் தயாராகிறது. • சிவந்த, நடுத்தரமான நெல் ரகம். அரிசியும் சிவப்புதான். • நடவு செய்யவும் நேரடி விதைப்புக்கும் ஏற்ற ரகம். பாரம்பரிய நெல் ரகங்களில் மழை, வெள்ளத்தைத் தாங்கி வளரக் கூடியது, விதைப்பு செய்து நாற்றங்கால் அல்லது வயலில் பத்து நாட்களுக்கு மேலாகத் தண்ணீர் வடிய வழியில்லாமல் இருந்தாலும் முளைக்கும் திறனும், முளைத்த விதையும் பாதிக்கப்படாது. • கதிர் முற்றி அறுவடை நேரத்தில் தொடர் மழையாலும் மழை நீர் சூழ்ந்திருக்கும் காலத்தில் நெல் கதிர் தண்ணீருக்குள் இருந்தாலும், அது முளைக்காது. குறைந்தபட்சம் 40 நாள் விதை உறக்கத்துக்குப் பிறகே முளைக்கும் தன்மை கொண்டது. • மருத்துவக் குணம் கொண்ட இந்த ரக அரிசியை மகப்பேறு காலங்களில் சாப்பிட்டுவந்தால், ஆரோக்கியமும் நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைப்பதுடன் மருத்துவச் செலவு குறையும். தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். குழந்தைகளுக்குத் தேவையான தாய்ப்பால் நன்கு சுரக்கும். இதனால் `டப்பா பால்பவுடர்’களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது. தாய், சேயின் ஆரோக்கியம் நீடிக்கும்
சிங்கினிகார் • மழை, நீர் தேங்குவது போன்ற இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளரும் வல்லமை கொண்டது சிங்கினிகார் நெல் ரகம். • நடுத்தர ரகமாகவும் சிவப்பு நெல், சிவப்பு அரிசியையும் கொண்டது. களை அதிகமாக உள்ள நிலத்திலும் சாகுபடி செய்ய ஏற்றது.செலவில்லாத ரகம். • இந்த நெல் ரகம் இயற்கையாகவே நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டது. • இந்த நெல் சாகுபடியில் அறுவடைக்குப் பின் வைக்கோலின் பெரும்பகுதி அழுகி நிலத்தில் மக்குவதால் மண்ணின் சத்து கூடுகிறது. இந்தச் சத்தையே உணவாக எடுத்துக்கொண்டு வளரும் தன்மை இயற்கையாகவே இந்த ரகத்துக்கு உண்டு. • நிலத்தில் மக்கும் பொருட்களால் மண்ணில் உண்டாகும் நுண்ணுயிர்களைச் சத்துகளாக எடுத்துக்கொண்டு, இடுபொருள் செலவு தேவைப்படாமல் சாகுபடி செய்யக்கூடிய நெல் ரகம் சிங்கினிகார். அந்த வகையில் இது செலவில்லாத நெல் ரகமும்கூட. • உணவுக்கும், பலகார வகைகளுக்கும் ஏற்றது. இந்த அரிசியின் சிறப்பு அவல், பொரிக்கு ஏற்ற ரகம். • நோய் எதிர்ப்புச் சக்தியும் மிகுந்தது. தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம். நோயாளிகள் கஞ்சி வைத்துக் குடிப்பதன் மூலம், மிகுந்த பலத்தையும் உடல் நலத்தையும் பெறுவார்கள்
கருப்புக்கவுனி -நெல் • இந்தநெல்வகை,. தமிழகத்தின்சிவகங்கைமாவட்டத்திலுள்ளஅனுமந்தக்குடிஎனும்நாட்டுப்புறபகுதியில்அதிகளவில்பயிரிடப்படுவதாககருதப்படும்இது, சாப்பாடு (உணவு) தயாரிக்கஉகந்ததல்லஎனகூறப்படுகிறது. • நீண்டகாலநெற்பயிரானஇது, சுமார்ஐந்துமாதகாலம்முதல், ஆறுமாதகாலத்தின்முடிவில் (150 - 170 நாட்கள்) அறுவடைக்குவரக்கூடியநெல்இரகமாகும். • நீண்டகாலநெற்பயிர்கள்சாகுபடிசெய்யக்கூடியசனவரிமாதம்தொடங்கும்நவரைப்பருவமும், மற்றும்செப்டம்பர்மாதம்தொடங்கும்பின்சம்பாபருவமும்ஏற்றதாககூறப்படுகிறது.[மேலும்இப்பருவத்தில், தமிழகத்தின்அனைத்துமாவட்டங்களிலும்சாகுபடிசெய்யப்படுவதாகஅறியப்படுகிறது. • நேரடிவிதைப்புமுறைக்குஏற்றமட்டற்றகளைப்புத்திறனோடுஅதிகக்கதிர்எடுக்கும்தன்மையுடையஇந்தநெல்இரகம், சாயாதஆற்றால்உடையதாகும். • கருப்புக்கவுனியின்நெற்பயிர்ஒப்பிடத்தக்களவில்நீர்குறைந்தமற்றும், உலர்நிலங்களிலும், கரிசல்மற்றும்செம்மண்போன்றநிலப்பகுதிகளில்செழித்துவளரக்கூடியநெல்இரகமாகும். • கருப்புக்கவுனியின்தானியமணி 1 சென்டிமீட்டர்நீளம்கொண்டதாகும். • கருப்புக்கவுனியின்வைக்கோல்150 சதவிகிதம்அதிகமாகக்கிடைக்கிறது. • கருப்புக்கவுனியின்அரிசிச்சோறுபோகசக்திஎனப்படும்ஆண்மைச்சக்தியைகொடுக்கிறது
சிவப்புக் கவுணி • சோழர் காலம் முதல் இன்றுவரை மக்கள் பயன்பாட்டில் இருந்துவரும் நெல் ரகம் சிவப்புக் கவுணி. இதன் அரிசியை ஒரு வேளை உட்கொண்டால், நாள் முழுவதும் களைப்பில்லாமல் பணி செய்ய முடியும். • தமிழகம் முழுவதும் மானாவாரி பகுதிகளில் பயிரிடப்படுகிறது. செம்மண் பகுதியிலும் அதிக மகசூல் தரக்கூடியது • நேரடி விதைப்புக்கு ஏற்ற இந்த ரகம், 140 நாள் வயதுடையது. வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளர்வதுடன் களைகளைக் கட்டுப்படுத்தும் தன்மையும் கொண்டது. • செட்டிநாட்டு சமையலில் இடம்பெறும் சிறப்பு இனிப்பு, கவுணி அரிசி இனிப்புதான். மங்களகரமான நிகழ்ச்சிகள் அனைத்திலும் அவசியம் இடம்பெறும். திருமணமான புதுத் தம்பதிகளுக்குத் தரப்படும் நீண்ட உணவுப் பட்டியலில் சிவப்புக் கவுணி அல்வா முக்கியமானது. • முஸ்லிம் வீட்டுத் திருமணப் பிரியாணி செரிப்பதற்காக உடன் தரப்படும் ஒரு வகை இனிப்பு, சிவப்புக் கவுணி அரிசியில் செய்யப்படுகிறது. • பிறந்த 16-ம் நாள் காப்பரிசி, காது குத்துக்குக் காப்பரிசி ஆகியவற்றுக்கு இந்த அரிசியே பயன்படுத்தப்படுகிறது. • சிவப்புக் கவுணி மருத்துவக் குணங்கள் நிறைந்தது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். பிரசவத்துக்குப் பிறகு தாய்மார்கள் இந்த அரிசியைத் தொடர்ந்து உண்பதன் மூலம் தாய்க்கும் குழந்தைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி, ஆரோக்கியம் கிடைக்கும். தற்போது பசுமை அங்காடிகளில் இந்த ரகம் கிடைக்கிறது. புழுங்கல் அரிசியைவிடப் பச்சரிசி சிறந்தது.
சிவப்புக் கவுணி ஆரோக்கியத்திற்கு ஆதாரமாக விளங்கும் இந்த அரிய வகை அரிசியில், உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள், (Antioxidant) மற்றும் “பூநீலம்” (Anthocyanin) போன்ற மூலப் பொருட்கள் நிறைந்துள்ளன
அறுபதம் குருவை குறிகிய காலத்தில் விளையக்கூடியது. எலும்பு பலப்படும்தசைகளை வழுவுட்டும்
அறுபதாம் குறுவை அரிசி எலும்பு சரியாகும்
குள்ளக்கார் • பாரம்பரிய நெல் வகையைச் சார்ந்த இது, சுகாதார நலன்கள் நிறைந்த, பல்வேறு சிவப்பு நிற அரிசி இரகங்களில் ஒன்றாகும். • குறுகியகால நெற்பயிராக உள்ள இது,[2] ஆண்டு முழுவதும், அனைத்துப் பட்டங்களிலும் (3 பருவங்கள்) பயிர் செய்ய ஏற்றதாகும். • மேலும் பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல் போன்ற தொந்தரவுகளை மிகவும் எதிர்க்கும் தன்மைக்கொண்டது. • இந்நெல், உப்பு மண், உவர் மண் போன்ற பல்வேறு நிலத் தன்மைகேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு, வறட்சி, மற்றும் நீர்த்தேக்கப் பகுதிகளிலும் தாங்கி வளரக்கூடியதாகும். • குள்ளக்கார் எனும் இந்த இரகத்தில், உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள், துத்தநாகம், இரும்புச் சத்துக்கள்நிறைந்துள்ளதால் கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. செரிமானம் மெதுவாக நடப்பதால், பசி எடுப்பது தாமதமாகும். இதனால், உணவு எடுத்துக்கொள்ளும் அளவு தானாகவே குறையும். • உடல் எடை குறைக்க நினைப்போர் இந்நெல்லின் அரிசிச்சோறு சாப்பிடுவதால், சாப்பிடும் அளவு குறைந்தும் அதேவேளை வயிறும் நிறைவதகாகக் கூறப்படுகிறது .[4]
சூரன் குறுவை சூரன் குறுவை அல்லது சூரக் குறுவை (SooranKuruvai) பாரம்பரிய நெல் வகையைச்சார்ந்த இது, தமிழகத்தின்நாகை மாவட்டத்திலுள்ள “வெள்ளப்பழம்” மற்றும் “கீவலுார்” போன்றப் பகுதிகளில் நன்கு வளரக் கூடிய நெல் இரகமாகும். 130 - 135 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், 30 - 35 நாட்கள் நாற்றங்கால் கால அளவு கொண்டதாகும். சூரன் குறுவையின் நெல் தானியமணி கரும்பழுப்பு நிறமாகவும், பெரு நயத்துடனும் காணப்படும் மத்திய, மற்றும் நீண்டகாலப் பருவங்களுக்கு ஏற்ற இரகமான சூரன் குறுவைக்கு, ஆகத்து மாதம் தொடங்கும் சம்பா பட்டமும், மற்றும் செப்டம்பர் மாதம் தொடங்கும் பின் சம்பா பட்டம் போன்ற பருவங்கள் ஏற்றதாகும். மேலும், இப்பட்டத்தில் (பருவத்தில்) தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வேளாண்மை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது
சித்திரை கார் • சித்திரை கார் என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின்ராமநாதபுரம். மாவட்டத்திலுள்ள ‘திருப்புல்லாணி’ எனும் நாட்டுப்புற பகுதியில் பிரதானமாக விளையக்கூடிய இந்த நெற்பயிர், ஒரு ஏக்கருக்கு சுமார் 1000 கிலோ வரையில் மகசூல் கொடுப்பதாக கருதப்படுகிறது. • மேலும் பொதுவாக இவ்வகை நெற்பயிர்களை விவசாயிகள், “மட்டை” மற்றும் “நொருங்கன்” எனவும் அழைக்கபடுகின்றனர். • 110 நாட்கள் வயதுடைய இந்நெல் இரகத்தை செப்டம்பர் மாதம் தொடங்கும் பின் சம்பா பருவத்தில் (புரட்டாசியின் நடுப்பகுதியில்) விதைத்து, சனவரியில் (தையில்) அறுவடைச் செய்யபடுகிறது. • மேலும் இதேப் பருவத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுவதாக அறியப்படுகிறது. • நீர்நிலைகளின் கரையோரப்பகுதிகளில் காணப்படும் மணற்பாங்கான நிலப்பரப்பில் வறட்சியைத் தங்கி வளரக்கூடிய சித்திரை கார், அதிக உயரம் வளர்ந்து வைக்கோலைப் பெருக்கிக் கொடுக்கக்கூடியது. • பொதுவாக சன்ன இரகங்களை விட இதன் சிவப்பு அரிசி அதிகம் விரும்புவதால் அதிக விலை மதிப்பை ஈட்டுவதாக கூறப்படுகிறது
தூயமல்லி • தூயமல்லி (Thuyamalli) பாரம்பரிய நெல் வகைகளில் வித்தியாசமானதாக கருதப்படும் இந்நெல் இரகம், வெள்ளை கலந்த மஞ்சள் நிறமாகவும், தூய்மையாகவும் காணபடுகின்றது. • பாரம்பரிய நெல் வகைகளில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ள இந்த தூயமல்லி நெல்லின் அரிசி, வெள்ளை நிறம் கொண்ட மிக சன்ன இரகமாக உள்ளது. தமிழ்நாட்டைஆண்ட குறுநில மன்னர்கள் தூயமல்லி அரிசியை (சோறு) மிகவும் விரும்பி சாப்பிட்டதுடன், இந்த நெல் இரகத்தைப் பயிர் செய்ய உழவர்களுக்கு ஊக்கமளித்துள்ளனர். • தூயமல்லி எனப்படும் இந்நெல் இரகம், மக்களின் பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளையும் ஈடேற்றும் தன்மை கொண்டது. இந்த நெல்லின் அரிசி மட்டுமல்லாது தவிடும், சத்து மிகுந்து காணப்படுகிறது. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இது, பலகார வகைகளுக்கும் பழைய சாதத்துக்கும் ஏற்ற இரகம் உகந்ததாகவும், மற்றும் இதன் நீராகாரம் இளநீர் போன்று சுவையைத் தரக்கூடியதாகவும் கருதப்படுகிறது. • 135 – 140 நாட்கள்
தூய மல்லி அரிசி உள் உறுப்புகள் வலுவாகும்
குழியடிச்சான் (நெல் • குழியடிச்சான்அல்லதுகுழிவெடித்தான் (Kuzhiyadichan) பாரம்பரியநெல்வகைகளில்வறட்சிக்குஅஞ்சாதஇரகமாகஅறியப்பட்டஇது, கடும்வறட்சியையும்தாங்கிவளர்ந்துமகசூல்தரக்கூடியநெல்இரகமாகும். மழை, மற்றும்ஆழ்குழாய்கிணற்றைநம்பிசாகுபடிசெய்தும், மற்றும்தண்ணீர்இன்றியும்வறட்சியைத்தாங்கிவளர்ந்துமகசூல்தரும்நெல்இரகமாகும். ஐப்பசிமாதத்தில் (அக்டோபர்) நேரடிவிதைப்புக்குஏற்றநெல்வகையானஇது, பயிர்நன்குவளர்ந்துதை (சனவரி) மாதம்அறுவடைக்குவந்துவிடக்கூடியது. முளைப்புக்குபின்னர்ஒருமழையில்அறுவடைக்குவரும்திறன்கொண்டது. குழிநீரைக்கொண்டுதுளிர்விட்டுத்தூர் (நெற்கதிர்) வெடிப்பதால், இந்நேல்லுக்கு, குளிகுளிச்சான்என்றொருபெயரும்உண்டு. 110 நாட்களில்அறுவடைக்குதயாராகக்கூடியஇந்நெல்இரகம், நான்கடிஉயரம்வரைவளரும். பொன்நிறமானஇந்தநெல்வகை, சிகப்புஅரிசியுடனான, மோட்டா (தடித்த) அரிசிமுட்டைவடிவத்தில்இருக்கும்.